புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து !

Loading… பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துவதாகக் மு.க.ஸ்டாலின்குறிப்பிட்டுள்ளார். Loading… இதேவேளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பா.ம.க.வின் புதிய தலைவர் அன்புமணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணியின் பணி சிறக்க இறைவனை வேண்டுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். Loading…